கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்த அமெரிக்க சொகுசு கப்பல்


அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்றையதினம் 900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலானது நாளை வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலாப் பயணிகள் 

கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்த அமெரிக்க சொகுசு கப்பல் | Viking Mars Ship Arrived Sri Lanka

கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், இலங்கையின் முக்கிய இடங்களை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

சுற்றுலாப் பயணிகள் கண்டி, பின்னவெல, காலி போன்ற நகரப் பயணங்கள், கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

முத்துராஜவெல மற்றும் ஆற்றில் படகுச் சவாரி, விவசாயக் கிராமங்களை பார்வையிடுதல், முச்சக்கரவண்டி சுற்றுப்பயணங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், சமையல் அனுபவங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைச் சுற்றுலாக்கள் மற்றும் இலங்கையின் தேயிலையின் சிறப்பு போன்றவற்றை அனுபவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.