தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 11ஆம் தேதி நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து மைசூர் வரை இயக்கப்படும் ரயிலானது ஜோலார்பேட்டை, பெங்களூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இது நிலையில் நேற்று இரவு மைசூரில் இருந்து வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்று குட்டியின் மீது மோதியதால் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்தது.
இதன் காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்னை வந்தடைந்தது. வந்தே பாரத் ரயில்கள் விபத்தில் சிக்குவது இது 5வது முறையாகும். இந்த நிலையில் சென்னை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் விபத்திற்கு காரணமான கன்று குட்டியின் உரிமையாளரை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாட்டின் உரிமையாளர் கண்டுபிடித்து அபராதம் விதிகப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.