மும்பை :காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைப்பதில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பான, ‘வீடியோ’ வெளியாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் பாதயாத்திரையில் உள்ளார்.
அங்கு, யாத்திரையின் ஒருபகுதியாக, ராகுல் உரையாற்றினார். மேடையில் இருந்த ராகுல், ”தற்போது தேசிய கீதம் ஒலிக்கப்படும்,” என்று அறிவித்தார்.
ஆனால், புரியாத மொழியில் வேறொரு பாடல் ஒலிபரப்பானது. இது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அது நம் அண்ட நாடான நேபாளத்தின் தேசிய கீதம் என்பது பிறகு தெரியவந்தது.
இந்தத் தவறு சரி செய்யப்பட்டு நம் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், ஐந்து பத்திகள் உடைய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இது தெரியாமல் மூன்று பத்திகள் முடிந்த நிலையில், கூட்டத்தில் இருந்தவர்கள், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷமிட்டனர். இதையடுத்து, தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த குளறுபடிக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement