புதுடில்லி, நேபாளத்தில் நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தலின்போது சர்வதேச தேர்தல் பார்வையாளராக வரும்படி, நம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளது. பார்லிமென்டின், ௨௭௫ தொகுதிகளுக்கும், ஏழு மாகாண சட்டசபைகளில், ௫௫௦ இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் சர்வதேச தேர்தல் பார்வையாளராக வரும்படி, நம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு, நேபாள தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, ௧௮ – ௨௨ வரை, அதிகாரிகள் குழுவுடன் ராஜிவ் குமார் நேபாளம் செல்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement