'நாங்கள் மிரட்டவில்லை…' ஜஸ்டின் – ஜின்பிங் அதிருப்தி வீடியோ; விளக்கமளித்த சீனா

இந்தோனேஷியாவின் பாலி நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா, அமெரிக்க, சீனா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி வந்தனர். 

அதனால், மாநாட்டில் நடைபெற்ற பல்வேறு விவகாரங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, அந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜி20 மாநாட்டில் நேருக்கு நேர் பேசிக்கொண்ட வீடியோ ஒன்று வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்த வீடியோவில், சீன அதிபரும், கனடா அதிபரும் நேருக்கு பேசிக்கொள்கின்றனர். சீன அதிபர் ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டினை நோக்கி,”இருநாட்டு விவகாரங்கள் குறித்து நாம் தனியாக பேசியது, அடுத்தநாள் செய்தித்தாள்களில் வந்துள்ளன. இது சரியல்ல, நாங்கள் அப்படி செய்யமாட்டோம்” என்று கூறினார். இதனை ஜின்பிங் சீன மொழியில் உரையாட, அவரின் மொழிப்பெயர்பாளர் ஆங்கிலத்தில் ஜஸ்டினிடம் விளக்கிக்கொண்டிருந்தார். 

மேலும் படிக்க | Canada PR: நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்தியது கனடா

மேலும்,”நேர்மையாக இருந்தால், நாம் பரஸ்பரம் நல்ல முறையில் தொடர்பில் இருக்கலாம். அல்லது பின்விளைவுகள் விவரிக்க முடியாத அளவில் இருக்கும்” என்றார் ஜின்பிங்.

இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின்,”நாங்கள் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடு. அதேபோல்தான் அனைத்திலும் வெளிப்படையாக, தைரியமான முறையில் செயல்படுவோம். நாம் ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவதை தொடர்வோம்” என்று பதிலளித்தார். இந்த வீடியோதான் வைரலானதை அடுத்து, பலரும் ஜஸ்டினை, ஜின்பிங் மிரட்டும் தொனியில் உள்ளதாக கூறப்பட்டது. பெரும் விவாதங்களும் கிளம்பின.

குறிப்பாக, விளைவுகள் விவரிக்க முடியாத அளவிற்கு இருக்கும் என ஜின்பிங் கூறியது அதிக விவாதிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த வீடியோ குறித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,” சமமான அடிப்படையில் நடைபெறும் வரை வெளிப்படையான பரிமாற்றங்களை சீனா ஆதரிக்கும். மேலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த கனடா நடவடிக்கை எடுக்கும் என்று சீனா நம்புகிறது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள வீடியோ ஜி20 மாநாட்டின் போது இரு தலைவர்களும் நடத்திய குறுகிய உரையாடல். இது மிகவும் சாதாரணமானது. தலைவர் ஜி யாரையும் விமர்சிப்பதாகவோ அல்லது குற்றம் சாட்டுவதாகவோ இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். 

வீடியோவில் ஜின்பிங்கின் அதிருப்திக்கு காரணம், கனடா தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்தது என ஜஸ்டினின் குற்றச்சாட்டு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. அவர்களின் ரகசிய பேச்சுவார்த்தை அச்சில் வந்ததுதான் ஜின்பிங்கை அதிருப்தியடைய செய்ததாக தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஜஸ்டின் சீன அதிபருடன் முதல்முதலாக தற்போதுதான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜஸ்டினின் குற்றச்சாட்டை சீனா முற்றிலுமாக மறுத்து, தாங்கள் மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என பதிலளித்தது. அதையே நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலும் சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் கூறினார்.  

மேலும் படிக்க | கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்! மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியது வட கொரியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.