பதவி விலகும் ஆளுநர்?; புதிய கண்டிஷனால் பரபரப்பு!

கேரளாவில் இடதுசாரி அரசு, ஆளுநர் ஆரிப் முகமது கான் இடையேயான முட்டல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை தகுதி நீக்கம் செய்யும் ஆயுதத்துடன் ஆளுநர் இறங்கினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்கலைக்கழகத்தில் தலையிடும் அதிகாரத்தையே ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் இருந்து பறித்து கேரளா அரசு அதிரடி காட்டி உள்ளது.

இவ்வாறாக கேரளா அரசின் பல்வேறு திட்டங்களுடன் ஆளுநர் முரண்பட்டு நிற்பதும், உடனே முதல்வர் பினராயி விஜயன் அல்லது அமைச்சர்கள் நேரில் சந்தித்து சமரசம் செய்வதுமாக நெருடலான உறவாகவே ஆளுநர் – கேரளா அரசாங்கத்தின் பந்தம் தொடர்ந்து வருகிறது.

ஒரே நேரத்தில் சிக்கும் ஓபிஎஸ் ஓபிஆர்; சேலத்தில் இருந்து தேனிக்கு வந்த செக்!

இந்த பரபரப்பான சூழலில் கேரள உயர்கல்வித் துறையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தலையிடுவதாக குற்றச்சாட்டை முன் வைத்து ஆளும் இடதுசாரி கட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவன் நோக்கி மாபெரும் கண்டன பேரணியை நடத்தின.

இந்நிலையில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் கூறி இருப்பதாவது:

நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகின்றேன் என கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கூறி வருகின்றீர்கள். எனது அதிகாரத்தை பயன்படுத்தி நான் நியமித்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த ஒருவரது பெயரையாவது குறிப்பிட்டால் உடனே ராஜினாமா செய்கிறேன்.

கேரளா அரசின் நிதி அமைச்சர் என்னை பார்த்து ‘உ.பியில் பிறந்த ஒருவர் கேரளாவின் கல்வி முறையை எப்படி புரிந்து கொள்ள முடியும்?’ என கூறினார். இந்திய ஒற்றுமைக்கு நிதி அமைச்சர் சவால் விடுகிறார்.

அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது, முதல்வரின் விருப்பம். எனக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆனால் எனது கடமையை நிறைவேற்ற நான் இவ்வளவும் செய்ய வேண்டும் என்பதால் குறைந்தபட்சம் கேரள மக்களுக்கு தெரியப்படுத்தினேன். இவ்வாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.