பிரித்தானிய மக்களுக்கு 900 பவுண்டுகள் உதவித்தொகை: யார் யார் தகுதியானவர்கள்?


விலைவாசி உயர்வால் நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு 900 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் அறிவித்துள்ளார்.

900 பவுண்டுகள்

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அவரது சிறப்பு அறிக்கையில் இந்த உதவித்தொகை தொடர்பில் விரிவான தகவலை குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானிய மக்களுக்கு 900 பவுண்டுகள் உதவித்தொகை: யார் யார் தகுதியானவர்கள்? | New Cost Of Living Payment Who Qualifies

@Skynews

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கும் 300 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகளும் வழங்கப்பட உள்ளது.

மேலும், மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு 650 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
650 பவுண்டுகள் உதவித்தொகையில் ஏற்கனவே, சரிபாதி தொகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீதி தொகை தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும்

மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் 900 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ள ஜெர்மி ஹன்ட், மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் உரிய ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மக்களுக்கு 900 பவுண்டுகள் உதவித்தொகை: யார் யார் தகுதியானவர்கள்? | New Cost Of Living Payment Who Qualifies

@getty

இதில் யூனிவர்சல் கிரெடிட் பயனாளிகள், வருவாயை அடிப்படையாக கொண்டு வேலை தேடுவோருக்கான ஊக்கத்தொகை பெறுபவர்கள் உட்பட பலர் தகுதியுடையவர்கள் என கூறப்படுகிறது.

இந்த 900 பவுண்டுகள் உதவித்தொகையானது எப்போது முதல் அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை என்றாலும், தவணை முறையில் அளிப்பார்கள் என்றே கூறப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.