புதிதாக தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக  புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இலங்கையின் அடுத்த தலைமுறையினர் முன்னோக்கி பயணிப்பதற்கான தமது சுயமான தொழில் முயற்சிளை ஊக்குவிப்பதற்காக  Brandix Apparel Ltd. நிறுவனம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்  (ICTA) நிறுவகத்துடன் மூலோபாய கூட்டு முயற்சி நடவடிக்கையில் ஒன்றிணைந்துள்ளது.

இது தொடர்பான மூலோபாய கூட்டு முயற்சி நடவடிக்கையில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த 17 ஆம் திகதி  கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சியின் மூலம் தொழில்நுட்ப தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களின் தொடக்க சுற்றுச்சூழல் கட்டமைப்பு  Startup இந்த நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மிகவும் செயலாக்கம் மிக்கதாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக Spiralation Startup Incubator மூலோபாய கூட்டாண்மை நடவடிக்கைகளுக்கு   நிதியளிப்பதன் மூலம் இது தொடர்பான ஆரம்ப நிறுவனங்களின் கணிசமான வளர்ச்சிக்கு உதவுவதுடன் விரைவான பரிணாம செயற்பாட்டையும் ஊக்குவிக்கும்.

தொழில் முயற்சியாளர்களின் ஆரம்ப தொழில் முனைவுக்கான தொழில் நுட்பத்திற்கு இந்த  The Spiralation Startup Incubator வலுவூட்டுகிறது. விதை உற்பத்திக்கான நிதியுதவி, பயிற்சி மற்றும் இதனுடன் தொடர்புபட்ட இணையதள மூலமான செயலமர்வுகள் மற்றும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வணிக ஊக்குவிப்புக்குமான விடயங்களை  Spiralation Startup Incubator  கீழான திட்டம் உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் உருவான பல தொழில்முனைவோர் சர்வதேச அளவில் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக கூட்டாக பங்களிப்பு செய்து வருகிறது. அத்தகைய வர்த்தக செயற்பாடுகளை எளிதாக்குவதற்கான வசதிகளை வழங்குவதற்காக பத்து Spiralation Startup Incubator  இன்குபேட்டர்களுக்காக  Brandix Apparel Ltd.  நிறுவனம் நிதி உதவி வழங்கும்.

மேலும் இந்த கூட்டாண்மை நிகழ்ச்சித்திட்டம் குறித்து, பிராண்டிக்ஸ் எப்ரல்  லிமிடெட்டின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பணிப்பாளரும், ஃபோர்ட்வுட் முகாமைத்துவப் பணிப்பாளருமான அர்ஜுன சிரிநந்த கருத்து தெரிவிக்கையில், “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது வர்த்தகத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கும் கூட்டாண்மை ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கும். பிராண்டிக்ஸ் எப்ரல் லிமிடெட் நிறுவனம் சிறந்த தயாரிப்புகளை நியாயமான விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தொழில்நுட்ப உதவியை எவ்வாறு பெற்றுக்கொள்வது குறித்தும் பலரால் தொடர்நது கேட்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக” கூறினார்.

இதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள டிஜிட்டல் தீர்வுகளை வழங்க எங்களுக்கு உதவியுள்ளது இதன் அடிப்படையில் ICTA உடன் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எமது கூட்டாண்மையானது இலங்கையின் தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்களின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதற்கும் பெரிதும் உதவும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் மலிக் ரணசிங்க உரையாற்றுகையில், “நாட்டில் டிஜிட்டல் உருமாற்றத்தை உருவாக்குவதில் முதன்மையான நிறுவனமாக, தமது நிறுவனம் செயல்படுவதுடன், அந்த நோக்கத்திற்காக ஒரு தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம் அதன் முக்கிய விடயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படையாக 2024 இறுதிக்குள் 1000 ஆரம்ப தொழில்நுட்ப வர்த்தகத்தை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு அதற்கு பாரிய உதவியாக அமையும்” என்றார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.