புதுடில்லி, :மின்சார வாகனங்களை எளிதாக வாங்க, வாடிக்கையாளர்களுக்கு இணையம் வாயிலாக கடன் வழங்கும் நிதி நிறுவனமான ‘ரெவ் பின்’ நிறுவனம், ‘ரெவ் பின் பாரத் யாத்ரா’ எனும் பிரசாரத்தை துவங்கி உள்ளது.
தற்சமயம், 14 மாநிலங்களில் மட்டும் இருக்கும் இந்த நிறுவனம், 2023க்குள், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற இலக்கோடு செயலாற்றி வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 லட்சம் வாடிக்கையாளர்களை பெறவும், கூடுதலாக 15 மாநிலங்களில் கால் பதிக்கவும் திட்டமிட்டு உள்ளது. அனைத்துவிதமான வாகனங்களுக்கும் இந்நிறுவனம் கடன் வழங்கி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement