சேலம் மாவட்டத்தில், தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த முதுநிலை பிசியோதெரபி மாணவர் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயதான நிர்மல் குமார், சேலம் அரியானூரில் உள்ள விநாயகா மிஷின் மருத்துவகல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு விடுதி அறையில் நிர்மல் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிர்மல் குமார், கையில் பெண் ஒருவரின் பெயரை பச்சை குத்தியுள்ளதால், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற கோணத்தில் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.