பிக்பாஸ் சீசன் 6 தமிழ் 40 நாட்களை எட்டியிருக்கிறது. ஏறத்தாழ நிகழ்ச்சி பாதியை எட்டிவிட்டது. இதில் சண்டை சச்சரவுக்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். விக்ரமன், அசீம், தனலட்சுமி ஆகியோர் வீட்டில் நாள்தோறும் ஏதாவதொரு தகராறில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் போட்டி சென்று கொண்டிருக்கிறது. அவர்களின் சண்டை சரியா தவறா? என்பதைக் காட்டிலும், ரசிகர்களுக்கு காரம் கலந்த பொழுதுபோக்கை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
இதற்கிடையில், சில ரொமான்ஸூகளும், கிரஷ்களும் அங்கங்கே வந்துபோகிறது. இப்போதைக்கு கிரஷ் சீன்கள் என்றால் ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாவுடன் செய்யும் விளையாட்டுகள் தான். நிகழ்ச்சி தொடக்கத்திலேயே ரக்ஷிதாவிடமே, நீங்கள் என்னுடைய கிரஷ் என கூறிவிட்டார் ராபர்ட் மாஸ்டர். அப்போது முதல் ரக்ஷிதா பக்கம் சாப்ட் கார்னர் காட்டி வந்தார். ரக்ஷிதாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக இருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல ராபர்ட் மாஸ்டரின் செய்கைகள் அவருக்கு பிடிக்கவில்லை.
ராபர்ட் மாஸ்டர் கிரஷ் என்றாலும், ரக்ஷிதா தனக்கு அப்படி இல்லை என விலகிச் செல்ல ஆரம்பித்தார். இப்போது, ராபர்ட் மாஸ்டரின் செய்கைகளுக்கு கடுமையாக ரியாக்ட் செய்யவும் ஆரம்பித்துவிட்டார். இதனை ராபர்ட் மாஸ்டரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ராஜா ராணி டாஸ்கில் கூட ரக்ஷிதாவின் ரியாக்ஷனால் கண்கலங்கிவிட்டார் அவர். இந்த காட்சிகள் பிக்பாஸின் இன்றைய புரோமோவில் இருக்கிறது. அதில் ராபர்ட் மாஸ்டர் கண்ணீர் விட்டு அழ, அவரை ஏடிகே தேற்றுகிறார். ரக்ஷிதா கோபத்துடன் இருக்கிறார்.