சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு வங்கக்கடலில் 19ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடுக, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி 3 நாட்களுக்கு நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது.
