கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனம் சுவரில் மோதி குறித்த விபத்து இடம்பெற்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கல்கமுவ, இஹலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த இராணுவ மேஜர் 35 வயதுடைய எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.