வார ராசிபலன்: 18.11.2022  முதல் 24.11.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம்

இந்த வாரம் நினைச்ச காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீங்க. புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீங்க. எந்த ஒரு பிரச்சினையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீங்க. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்துல மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீங்க. தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். தொழில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு ஆபீஸ்ல புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 23 முதல் நவம்பர் 25 வரை

சந்திராஷடம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

ரிஷபம்

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் நோ பிராப்ளம்ஸ். நண்பர்கள், உறவினர்களுடன் இருந்துக்கிட்டிருந்த வீண்பகை நீங்கும். காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உள்ளவர்களைக்கூடுமானவரை நெருங்காதீங்க. பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை தாமதங்கள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை ஒன்று புது கோணத்துல எழும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பாங்க. புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

மிதுனம்

சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிக்கும் வாரம். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்துல சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கி ‘ஹப்பாடா’ன்னு நிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் நீங்கும். மத்தவங்களை அனுசரித்து நன்மை காண்பீங்க. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீங்க.

பெண்களுக்கு சமையல் மற்றும் ஆபீசில் பாராட்டுக் கெடைக்கும். வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

கடகம்

எடுத்துக்கிட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். வீண் பயம் எதுக்குங்க? தூக்கி எறிங்க. ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைஞ்சு மகிழ்வீங்க. சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். ஆப்போசிட் செக்ஸ்காரங்ககிட்ட எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வாங்க. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்துல எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் பேசும்போது கவனம் தேவை. பெண்கள் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் எதிர்பார்த்த சக்ஸஸ் உண்டாகும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

சிம்மம்

கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிங்க கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லதுங்க. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீங்க. சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீங்க.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடியும். பட்.. அதுக்காகக் கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.

கன்னி

அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடந்தால்கூட நல்லபடியா முடியுங்க. புதிய ஃப்ரெண்ட்ஸ் கெடைப்பாங்க. மற்றவர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பாங்க. மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த அண்ட் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும் வாரம். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீங்க. வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீங்க. குடும்பத்துல சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

துலாம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவாங்க. பெண்களுக்கு புத்திசாதூரியம் மேலும் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சினைகள் குறையும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். பிஸினஸில் புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிங்க கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீங்க. மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீங்க

விருச்சிகம்

முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வாரம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீங்க. வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். ஆபீஸில் உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷன் நீங்கி நிம்மதியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவாங்க. நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்துல இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் மன உறுதி ஏற்படும். கலைத்துறையினருக்கு சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

தனுசு

அரசியல்வாதிகளுக்கு தங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கி நிம்மதி வருவதால் பாடத்துல கவனம் செலுத்திப் படிக்க ஆரம்பிப்பீங்க. அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதமின்றி துரிதமாகக் கெடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீங்க. குடும்பத்துல இருந்த பிரச்சினைகள் தீரும். குழப்பங்கள் நீங்கும். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம்.

மகரம்

பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீங்க. சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். இந்த வாரம் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் தொல்லை நீங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து நிம்மதி காண்பீங்க. தட்ஸ் குட். உத்தியோகத்துல உள்ளவங்களுக்குக் கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்துல அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 16 முதல் நவம்பர் 19 வரை

சந்திராஷடம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கும்பம்

இந்த வாரம் பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சுணக்க நிலை நீங்கும். வீண்பழி மறையும். சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்துல அமைதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்புகள் உயரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிச்சுப் பலன் பெறுவீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 19 முதல் நவம்பர் 21 வரை

சந்திராஷடம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

மீனம்

பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் வாரம். தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆடம்பர செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். மேலிடத்திற்கு பயந்து வேலை செய்து நற்பலன் பெறுவீங்க. உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீங்க. கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். அதனால் என்ன? சூப்பர் மார்க்ஸ் வாங்கப் போறீங்களே. குழந்தை இல்லாதவங்களுக்குக் குழந்தை பிறக்கும். குழந்தை உள்ளவங்களுக்கு அவங்ளால நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். கல்யாணத்துக்குக் காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு நிச்சயதார்த்தம் முடியுங்க. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 21 முதல் நவம்பர் 23 வரை

சந்திராஷடம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.