சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. இதனால் அப்செட்டான ரஜினி டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். டாக்டர் வெற்றியை நெல்சனுடன் ரஜினி இணைந்ததை கொண்டாடிய ரசிகர்கள் பீஸ்ட் பட தோல்வியை வைத்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தச் சூழலில் ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ரஜினி – நெல்சன் இணையும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி ஷூட்டிங்கும் தொடங்கியது. இதில் ரஜினி நடிக்கும்ம் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள்மோகன் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கிடையே சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஜெயிலர் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. மழை ஓய்ந்ததை அடுத்து படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs
— Sun Pictures (@sunpictures) November 18, 2022
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மேக்கிங் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்துக்கென போடப்பட்ட செட்டில் ரஜினிக்கு நெல்சன் திலீப்குமார் காட்சிகளை விளக்கும் விதமாக இந்த க்ளிம்ப்ஸ் அமைந்திருக்கிறது. இதனைக் கண்ட ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கிவருகின்றனர்.
முன்னதாக, மலையாள நடிகர் விநாயகன் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. அவருக்கான காட்சிகளும் படமாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவர் திமிரு, கம்மாட்டி பாடம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.