10 பிரித்தானியர்கள்… ஊடுருவிய ஈரான் கொலைகாரர்கள்: கட்டாரில் இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தல்


கட்டாரில் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈரானிய கொலைகாரர்கள்

பலம் பொருந்திய 14 பேர்கள் கொண்ட குழு ஒன்றை இங்கிலாந்து அணியின் பாதுகாப்புக்காக, அவர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலில் கட்டார் அரசு களமிறக்கியுள்ளது.

10 பிரித்தானியர்கள்... ஊடுருவிய ஈரான் கொலைகாரர்கள்: கட்டாரில் இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தல் | Iranian Plot To Kill Brits World Cup Hq

@dailystar

இங்கிலாந்து கால்பந்து அணிக்கான முதல் போட்டி நடைபெறும் நாளில் 10 பிரித்தானியர்களை கொல்லவோ கடத்தவோ ஈரானிய கொலைகாரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் MI5 தலைவர் கென் மெக்கலம் தெரிவிக்கையில், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடு இது என தெரிவித்துள்ளார்.
ஈரானின் கிஷ் தீவானது கட்டாருக்கும் 192 மைல்கள் தொலைவில் உள்ள பகுதியாகும்.

இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு

மேலும், இங்கிலாந்து அணி தமது முதல் போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது. திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் சுமார் 10,000 இங்கிலாந்து ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

10 பிரித்தானியர்கள்... ஊடுருவிய ஈரான் கொலைகாரர்கள்: கட்டாரில் இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தல் | Iranian Plot To Kill Brits World Cup Hq

@dailystar

இங்கிலாந்து அணி தங்கியிருக்கும் ஹொட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 30 அடி இடைவெளியில் பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, ஒட்டக வீரர்களும் இங்கிலாந்து அணியின் பாதுகாப்புக்கு களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போல், பிரித்தானியர்களை கொல்ல திட்டமிடும் ஈரானையும் போட்டியில் இருந்து விலக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.