12ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அரிய வாய்ப்பு…! ஓசூர் டாடா ஆலையில் தங்கும் வசதியுடன் வேலை….

ஓசூர்: தமிழ்நாட்டின் தொழில்நகரமாக திகழும் ஓசூர் டாடா ஆலையில் தங்கும் வசதியுடன் 12ம் வகுப்பு படித்த 18வயதுக்கு மேற்பட்ட இளம்பெண்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. வரும் 20ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை அந்த பகுதி இளம்பெண்கள் இந்த அரிய வாய்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள்  பெண்களுக்கான அரிய வேலை வாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு  தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பணி: இளநிலை தொழில் நிபுணர்கள்

பணியிடம்: டாடா தொழிச்சாலையின் இடம்: ஓசூர், அருகே தமிழ்நாடு

படிப்பு: 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி (பட்டதாரிகள், டிப்ளமாக, ஐடிஐ படித்தவர்கள் உள்பட மற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்)

துவக்கநிலை சம்பளம்: மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16,557/- மற்றும் போனஸ்

பணியாளர்க்கான நலத்திட்டங்கள்: நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுடு அவர்களுக்கு 12 நாள் பயற்சி வழங்கப்பட்டு, பணியாணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒருவருட பணி அனுபவத்திற்கு பிறகு, அவர்கள் மேற்படிப்பிற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல், தேலையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்

ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அனைத்து” நலத்திட்டங்கள் (PF/Gratuity/ESI போன்றவை) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தகுதியுடைய இளம்பெண்கள் இன்றே விண்ணப்பிங்கள். இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.