12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்| Dinamalar

வெள்ளி முதல் வியாழன் வரை (18.11.2022 – 24.11.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்:

புதன், சுக்கிரன் நன்மையை வழங்குவார்கள். சூரிய வழிபாடு சுபிட்சம் தரும்.

அசுவினி: வாரத்தின் முதல் நாளில் சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை அடைவீர்கள். சனிக்கிழமை முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் தடைகள் அகலும். புதன் மாலை முதல் செயல்களில் கவனம் தேவை.

பரணி: பனிரெண்டாமிட குருவால் செலவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட நன்மை உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். புதன் மாலை முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.

கார்த்திகை 1ம் பாதம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். குடும்பத்தின் நலனுக்காக செலவு ஏற்படும். உறவினர் வழியே சில சங்கடங்கள் உண்டாகும் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் அதை முடித்து வைப்பீர்கள். புதன் முதல் எச்சரிக்கை அவசியம்.

சந்திராஷ்டமம்

23.11.2022 மாலை 4:40 மணி – 25.11.2022 இரவு 8:07 மணி

ரிஷபம்:

குரு, கேது நன்மை வழங்குவர். தட்சிணாமூர்த்தியை வழிபட வளமுண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4: லாபகுருவால் உங்கள் முயற்சிகள் விறுவிறுப்பாக நடந்தேறும். யோசித்து செயல்பட்டு லாபம் காண்பீர்கள். ஆறாமிட கேதுவால் ஆற்றல் அதிகரிக்கும். எதிரிகள் விலகிச் செல்வர்.

ரோகிணி: ராசிநாதனின் பார்வையுடன் சூரியனின் பார்வையும் உண்டாவதால் செல்வாக்கு உயரும். பணியில் இருந்த பிரச்னைகளை சரிசெய்வீர்கள். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத வருவாய் உண்டாகும்.

மிருகசீரிடம் 1, 2: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களைத் தேடி வந்து சரணடைவர். சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

சூரியன், புதன், ராகு நன்மை வழங்குவர். துர்கையை வழிபட துன்பம் நீங்கும்.

மிருகசீரிடம் 3, 4: வாரத்தின் முதல்நாளில் எண்ணம் நிறைவேறும். சனிக்கிழமை, ஞாயிறில் செயலில் சிரமம் உண்டாகும். திங்கள் முதல் எதிர்பாராத வரவால் உற்சாகம் அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சி நிறைவேறும்.

திருவாதிரை: முயற்சிகள் எளிதாக நிறைவேறும். பிள்ளைகளுக்காக செலவு அதிகரிப்பதுடன் சில பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். தொழிலில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் அதை சரி செய்வீர்கள். உடல்நலனில் கவனம் தேவை.

புனர்பூசம் 1, 2, 3: ஆறாமிட சூரியனால் ஆற்றல் அதிகரிக்கும். லாபஸ்தான ராகுவால் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். செலவு அதிகரித்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். உணர்ச்சி வசப்படாமல் செயலாற்றுவது நல்லது.

கடகம்:

குரு, சுக்கிரன், சந்திரன் நன்மை வழங்குவர். சந்திர பகவானை எண்ணி செயல்பட ஏற்றமுண்டாகும்.

புனர்பூசம் 4: குருபகவானின் வக்ர நிவர்த்தியால் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர்கள். செயல்களில் வேகம் அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை கூடும். புதிய பொறுப்பு உண்டாகும்.

பூசம்: செயலில் வேகம் இருக்கும். பொருளாதார நிலை உயரும். சிலர் வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள். தொழில், பணியில் விருப்பம் நிறைவேறும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் தேடி வரும்.

ஆயில்யம்: நண்பர்கள் ஆதரவுடன் புதிய முயற்சி ஈடுபடுவீர்கள். நீண்டநாள் எண்ணம் ஒன்று ஈடேறும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து வேலைக்குரிய தகவல் வரும். நன்மை அதிகரிக்கும் வாரம்.

சிம்மம்:

கேது, சனி, சுக்கிரன், புதன் நன்மை வழங்குவர். நவக்கிரக வழிபாடு நலம் தரும்.

latest tamil news

மகம்: மூன்றாமிட கேதுவும், ஆறாமிட சனியும் உங்கள் நிலையை உயர்த்துவர். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். சனிக்கிழமை முதல் சந்திரன் அருளால் தெளிவாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

பூரம்: நெருக்கடி அதிகரித்தாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். செல்வாக்கு உயரும். புதிய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் என்ற நிலையை அடைவீர்கள். சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். திங்கள், செவ்வாயில் வரவு அதிகரிக்கும்.

உத்திரம் 1: வாரத்தின் முதல்நாள் மகிழ்ச்சியாக செல்லும். அதன்பின் செயல்களில் கவனம் செல்லும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்களின் சுய ஆற்றல் வெளிப்படும்.

கன்னி:

சூரியன், சுக்கிரன், குரு நன்மை வழங்குவர். அனுமன் வழிபாடு அல்லல் போக்கும்.

உத்திரம் 2, 3, 4: வாரத்தின் முதல் நாளில் செலவு அதிகரிக்கும். சனிக்கிழமை, ஞாயிறில் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திங்கள் முதல் வருமானம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.

அஸ்தம்: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். புதிய இடம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திங்கள் முதல் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

சித்திரை 1, 2: வாரத்தின் முதல் நாளில் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். சனிக்கிழமை முதல் பொன், பொருள் சேரும். உங்கள் செயல்பாடுகளால் குடும்பத்தினர் மகிழ்வார்கள். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மைகள் ஏற்படும்.

துலாம்:

சுக்கிரன், புதன் நன்மை வழங்குவர். விநாயகரை வழிபட வினைகள் தீரும்.

சித்திரை 3, 4: ஜென்ம கேதுவால் நிம்மதியற்ற நிலையை அடைந்தாலும் வாரத்தின் முதல் நாளில் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திங்கள் மதியம் முதல் உங்கள் செயல்களில் முன்னேற்றம் உண்டாகும்.

சுவாதி: சப்தம ஸ்தான ராகுவால் எதிர்பாலினர் உங்களுக்கு தவறான வழி காட்டுவார்கள். சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்கு நன்மையாகும். உங்கள் முயற்சிக்கேற்ப வருவாய் உண்டாகும். வரவும், செலவும் நிறைந்த வாரம்.

விசாகம் 1, 2, 3: வாரத்தின் தொடக்கமே உங்கள் நிலையில் முன்னேற்றமாக இருக்கும் என்றாலும் திடீர் செலவுகள் ஏற்படும். திங்கள் மதியம் முதல் உங்கள் மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். குருவருளால் சங்கடங்களை எல்லாம் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்:

ராகு, சனி, குரு, சுக்கிரன் நன்மை வழங்குவர். ராகு, கேது வழிபாடு முன்னேற்றம் தரும்.

விசாகம் 4: திங்கள் மதியம் வரை முயற்சிகளில் எளிதாக வெற்றி காண்பீர்கள். தொழில், பணியில் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு பணியில் விரும்பிய மாற்றம் உண்டாகும். செல்வாக்கு உயரும்.

அனுஷம்: பிரதான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். எதிரிகள் பின்வாங்குவார்கள். பிரபலங்களின் ஆதரவால் முன்னேற்றம் காண்பீர்கள். சொத்துகளில் உண்டான பிரச்னைகள் விலகும்.

கேட்டை: குருபகவானின் பார்வை பலத்தால் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு விலகும். நீங்கள் நினைத்தவற்றில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பொன், பொருள் வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு:

சுக்கிரன், கேது நன்மை வழங்குவார்கள். மகாலட்சுமி வழிபாடு நலம் தரும்.

மூலம்: குருவின் பார்வை பலத்தால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனதில் தெளிவு பிறக்கும். செயல்களில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும். புதன் மாலை முதல் எதிர்பாராத செலவு ஏற்படும்.

பூராடம்: இரண்டாமிட சனியால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். பேச்சால் சங்கடங்கள் உண்டாகும் என்பதால் நிதானம் அவசியம். சந்திரனின் சஞ்சார நிலையால் கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை உருவாகும். லாபம் அதிகரிக்கும்.

உத்திராடம் 1: வாரம் முழுவதும் நிதானமும் கவனமும் தேவை. புதன் மாலை வரை முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் ஏற்படும். வர வேண்டிய வரவு வந்து சேரும். தொழிலில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும்.

மகரம்:

சூரியன், சுக்கிரன், புதன் நன்மை வழங்குவர். வராகியை வழிபாட்டால் சங்கடம் விலகும்.

உத்திராடம் 2, 3, 4: வெள்ளியன்று இரவு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையும் கவனமும் தேவை. அதன்பின் நிலைமை சீராகும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை உயரும்.

திருவோணம்: வாரத்தின் முதல்நாளில் வீண் சங்கடங்களால் மனதில் பயம் தோன்றும். சனிக்கிழமை முதல் சிரமம் நீங்கும். பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்வீர்கள். பணியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

அவிட்டம் 1, 2: வெள்ளியன்று முயற்சிகள் இழுபறியாகும். மற்றவர்களால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். சனிக்கிழமை முதல் பேச்சில் தெளிவும் வேகமும் உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்

16.11.2022 மாலை 5:50 மணி – 19.11.2022 நள்ளிரவு 3:51 மணி

கும்பம்:

ராகு, சூரியன், புதனால் நன்மை உண்டாகும். அனுமன் வழிபாடு அனுகூலம் தரும்.

அவிட்டம் 3, 4: வெள்ளியன்று இரவு வரை செயல்களில் வெற்றிகளைக் காண்பீர்கள். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்த்தவற்றில் இழுபறி உண்டாகும். திங்கள் மதியத்திற்கு மேல் நன்மை ஏற்படும்.

சதயம்: சனிக்கிழமை, ஞாயிறன்று செயல்களில் கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள் என்றாலும் ஓரளவு நிலைமையை சமாளிப்பீர்கள். திங்கள் மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூரட்டாதி 1, 2, 3: வாரத்தின் முதல் நாளில் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சனிக்கிழமை அதிகாலை முதல் திங்கள் காலை வரை எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். அதன்பின் முயற்சிகள் வெற்றி பெறும்.

சந்திராஷ்டமம்

19.11.2022 நள்ளிரவு 3:52 மணி – 21.11.2022 காலை 11:25 மணி

மீனம்:

சனி, சுக்கிரன் நன்மை வழங்குவர். குருபகவானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி 4: திங்கள் காலை வரையில் உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்கள் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை. அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.

உத்திரட்டாதி: வாரத்தின் முற்பகுதியில் உங்கள் செயல்கள் எளிதாக வெற்றி பெறும். அரசு வகையில் இருந்த நெருக்கடி மறையும். பணியாளர்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவர். திங்கள் காலை முதல் செயல்களில் எச்சரிக்கை அவசியம்.

ரேவதி: பாக்கியஸ்தான சூரியனால் அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. திங்கள் காலை முதல் புதன் மாலை வரை செயல்களில் சங்கடம் உண்டாகலாம்.

சந்திராஷ்டமம்

21.11.2022 காலை 11:26 மணி – 23.11.2022 மாலை 4:39 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.