சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 200 நபர்களை ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயில் வரை ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளை வெளியிட்டு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 20 மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்களை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
