அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும், மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக, மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் என்று, உயர் கல்வித் துறை ஆடை கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், பேராசிரியர்கள் இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என்று, உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை (ஓவர் கோட்) அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பெண் பேராசிரியர்களுக்கு இந்த மேலங்கியை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று, உயர்கல்வித்துறை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும் பேராசிரியர்களுக்கு இது ஒரு சீருடை போல் அமைய வேண்டும் என்றும், உயர் கல்வித் துறை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.