Gujarat Election 2022: வாக்காளர்களை கவர பாஜகவின் ஐடியாவை பாருங்க!

குஜராத் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, மத்திய் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் தேர்தல் என்பதாலும் குஜராத் மாநில பேரவைத் தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான
காங்கிரஸ்
, புதிதாக களமிறங்கி உள்ள ஆம் ஆத்மி என இத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தீர்மானமாய் உள்ளது பாஜக, தேர்தலில் வெற்றிப்பெற பல்வேறு உத்திகளை அக்கட்சி கையாண்டு வருகிறது.

இவற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக, தேர்தல் பிரசாரங்களில் வாக்காளர்களை கவர்வதற்காக ரோபோக்களை களமிறங்கி உள்ளது குஜராத் மாநிஸ பாஜக. பாஜகவின் சாதனைகள், பாஜக வேட்பாளர்கள் குறித்த விவரங்களை கூறி வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன இந்த ரோபோக்கள்.

அத்துடன் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு இவை விநியோகித்து வருகின்றன.

வாக்காளர்கல் மத்தியில் புதிய கவனத்தை பெற்றுள்ள ரோபோக்களை, பாஜக வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்கு சேகரிக்க போகும்போதும் அவரகளுடன் செல்லும்படியாக கூடுதல் ரோபோக்கள் களமிறக்கப்பட உள்ளதாக குஜராத் மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.