'அமேசான்' ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய தொடங்கியது

ஆட்குறைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை 44 பில்லியன் டொலர் கொடுத்து வாங்கிய உலக பணக்காரர் எலான் மஸ்க் ட்விட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

இந்த நிலையில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களும் பணியில் இருந்து ஊழியர்களை நீக்கினார்.

இதனை தொடர்ந்து, உலகின் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகி வருவதாக அமெரிக்கா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே அந்த குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நிறுவத்துக்குள்ளே வேறு துறைகளில் வெற்றிடங்கள் இருப்பின் விண்ணப்பித்து இடம் மாறிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.