இங்கிலாந்தில் பூமிக்கடியில் இரகசிய அறை ஒன்றை பிரித்தானியர் ஒருவர் கட்டி
வைத்திருப்பதை பொலிசார் கண்டுபிடித்தார்கள்.
அறையின் கீழிருந்த இரகசிய அறை
இங்கிலாந்திலுள்ள Cowley என்ற இடத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்துவந்த நிலையில்,
பழைய பொருட்களை போட்டுவைப்பதற்கான அறை போன்ற ஒரு அறையை உருவாக்கியிருந்தார்
Akil Budini (40) என்ற பிரித்தானியர்.
அந்த அறையை பொலிசார் சோதனையிட நேர்ந்தது.
பொலிசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி
அந்த அறையை பொலிசார் சோதனையிட்டபோது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், அங்கு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா பெரிய பெரிய பொட்டலங்களாக
கட்டிவைக்கப்பட்டிருந்தது. அத்துடன், கஞ்சா வளர்க்க உதவும் சில கருவிகளும்
அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று அது தொடர்பான புகைப்படங்களை நேற்று நீதிபதி
பார்வையிட்டார்.
அந்த புகைப்படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அந்த இரகசிய
அறைக்குச் செல்லும் படிக்கட்டுகள், முதல், அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த
போதைப்பொருட்கள் முதலானவற்றைக் காணலாம்.