பெருவில் உள்ள லிமாவின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து LATAM ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானத்தில் 102 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர். இந்த விமானம், விமான தள ஓடுபாதையில் செல்லும் போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், தீயணைப்பு வாகனத்தில் வந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாரும் பாதிப்பில்லை என விமான நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த விபத்து தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
In PERU
A #LATAM Airlines plane taking off from Lima’s international airport struck a firetruck on the runway and caught fire on Saturday. Authorities said the plane’s passengers and crew were all safe, but two firefighters in the truck were killed. #Twitter #latamperu pic.twitter.com/ErXhhwvwZ5— -|- (@KINGDEMANACATOS) November 19, 2022
இந்த விபத்தை தொடர்ந்து, விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் விபத்துக்கான காரணங்களையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள், “விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி வருகிறோம். மேலும் விபத்து தொடர்பாக விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.