உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் சூட்கேஸில் பெண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உ.பி., மதுரா நகரில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் ரயா என்ற இடத்தில் பெரிய சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் அதை திறந்து பார்த்த போது உள்ளே பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் இருந்தது. உடலில் ஒரு இடத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement