சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாரிமுத்து என்பவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் மாரிமுத்து மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஆசிரியர் மாரிமுத்துவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.