டாஸ்மாக் வருமானம் குறித்து செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன் மீது வழக்கு! அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல்…

சென்னை: சாராயஅமைச்சர் என அரசியல்கட்சிகளால் விமர்சிக்கப்படும் செந்தில் பாலாஜி, தீபாவளியொட்டியை நடைபெற்ற டாஸ்மாக் வருமானம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக,  ஜூனியர் விகடன் பத்திரிகை மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்து உள்ளார்.

திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக  செந்தில்பாலாஜி உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தபோது, பண மோசடி செய்ததாக அவர்மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இவர் டாஸ்மாக் மூலமாக அதிகம் பணம் சம்பாதித்து வருவதாக பாஜக தொடர் குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக, பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையின்போது, டாஸ்மாக் விற்பனை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தீபாவளி பண்டிகையையொட்டி  3 நாட்களில்708 கோடி ரூபாய்க்கு மது  விற்பனை ஆகியிருப்பதாக திமுக ஆதரவு சன் தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால்,  அமைச்சர் தந்தி டிவிதைன் தவறான செய்தி வெளியிட்டதாக சாடியிருந்தார்.

இதைத்தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்தார். அவரது அறிக்கையில், கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.  இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும் ? கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது   டாஸ்மாக் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஜூனியர் விகடன் நாளிதழ்மீதும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடரப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஜூனியர் விகடன் இதழில்,  அடாவடி வசூல்.. அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி.. என்று ஜூனியர் விகடனில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து கட்டுரை வெளிவந்திருக்கிறது.

இதைக்கண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடுப்பான நிலையில், இதுகுறித்த டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘’இதழியல் அறம் துளியுமின்றி, சரியும் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள தொடர்ந்து அவதூறு, பொய்களைப் பரப்பி மஞ்சள் பத்திரிக்கை போல கீழ்த்தரமாகச் செயல்படும்  ஜூனியர் விகடன்  நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்ட நிருபர்கள் மீதும் நீதிமன்றத்தின் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரின் இந்த தகவல் ஊடகடத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.