ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனமும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கை நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்திக், அன்பு, போதும் பொண்ணு ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.