சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை அடுத்த நசரத் பேட்டையில் போதிய பாதுகாப்பு அறிவிப்புகளின்றி சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் சிலர் நெரிசலில் சிக்காமலிருக்க பணிகள் நடைபெறும் சாலையில் புகுந்து வருகின்றனர் . அப்போது ரோடு ரோலர் வாகனம் முன்னும் பின்னும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு பலகைகளை வைத்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.