பிரித்தானியாவில் வெள்ளை குதிரை வண்டியில் சென்ற 10 வயது சிறுமி சடலம்! மனதை பிசையும் புகைப்படங்கள்


பிரித்தானியாவில் வெள்ளை குதிரையுடன் கட்டப்பட்ட வண்டியில் வைக்கப்பட்டிருந்த சிறிய சவப்பெட்டியில் 10 வயது சிறுமியின் சடலம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மனதை உருக வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளியில் சுருண்டு விழுந்த மாணவி

Wakefieldல் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி Rai-Lèyah Parveen Saddique (10).
இவர் சமீபத்தில் பள்ளிக்கூடத்தில் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் மொத்த குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளதுடன், உறவினர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
Rai-ன் இறுச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் கலந்து கொண்டனர்.

Rai

Janaza Announcements/Justice for All People’s Campaign/Facebook

காண்போர் கண்களை குளமாக்கிய சவப்பெட்டி

சிறுமியின் சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு வெள்ளை குதிரை மூலம் இழுத்து செல்லப்படும் வண்டியில் வைக்கப்பட்டது.
இது தொடர்பான மனதை கலங்கடிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Rai முன்னர் ஆரோக்கியமாக இருந்தார் எனவும் பின்னர் மூளை ரத்தக்கசிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வேலையை சிறப்பாக செய்பவர் எனவும் குடும்பம் மற்றும் நண்பர்களால் மிகவும் விரும்பப்பட்டவராக இருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வெள்ளை குதிரை வண்டியில் சென்ற 10 வயது சிறுமி சடலம்! மனதை பிசையும் புகைப்படங்கள் | Uk Girl Dies Suddenly Tiny Coffin

Provided by Daily Mail



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.