காஸா: பாலஸ்தீனத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர் பலியாகினர்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் வசித்த ஒரு குடும்பத்தில், நேற்று முன்தினம் ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், எகிப்தில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்திருந்ததால், நிகழ்ச்சி தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியது.
இந்த விபத்தில், பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குளிர்காலத்துக்காக சேமித்து வைத்திருந்த டீசல் மற்றும் சமையல் காஸ் மீது மெழுகுவர்த்தி விழுந்ததால் தீப்பற்றி பரவியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement