அமெரிக்கா: LGBTQ நைட் கிளப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி… 18 பேர் காயம்!

அமெரிக்காவில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் (LGBTQ) நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில்(Colorado Springs) உள்ள LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான விடுதியாக அறியப்படும் கிளப் கியூ(Club Q) இரவுநேர விடுதியில், நேற்றிரவு அடையாளம் தெரிய நபரால் திடீரென இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியிருக்கிறது.

இதனை அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, துப்பாக்கிச்சூட்டை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் படுகாயமடைந்த 18 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொலராடோ ஸ்பிரிங்ஸ் லெப்டினன்ட் பமீலா காஸ்ட்ரோ, கிளப்பில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் ஒருவரைக் காவலில் வைத்து, விசாரித்துவருவதாகத் தெரிவித்தார்.

LGBTQ

அதையடுத்து கிளப் கியூ தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “எங்கள் சமூகத்தின் மீதான இந்த முட்டாள்தனமான தாக்குதலால் கிளப் கியூ பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் இருக்கின்றன. மேலும், துப்பாக்கிதாரியை அடக்கி தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்த வீரமிக்க வாடிக்கையாளர்களின் எதிர்வினைகளுக்கு நன்றி” எனக் கூறியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.