அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமிக்கு, வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்தது.
வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியிலுள்ள புல்வெளியில் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண வரவேற்பில் இருதரப்பு உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
28 வயதான நவோமி, தன்னுடன் சட்டக்கல்லூரியில் பயின்ற 25 வயதான பீட்டரை மணம் முடித்தார்.
அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில்பைடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெள்ளை மாளிகையில் அதிபரின் குடும்ப திருமண விழா நடைபெறுவதே இதுவே முதன்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.