இன்று உலக ஹலோ தினம்| Dinamalar

“ஹலோ” இது ஒரு மொழியின் சொல் அல்ல ..இது மற்றவர் கவனத்தை தன் மீது ஈர்க்கச் செய்யும் ஒரு வசீகர ஓசை ..

இந்த சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்” என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது. சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், “ஹலோ’ தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் டெலிபோனை கண்டுபிடிப்பதற்கு முன்பாக சில சாதனங்களை கண்டுபிடித்திருந்தாலும். இது தான் அவருடைய மிகப்பெரிய சாதனையாகும். இந்த சாதனத்தை கண்டுபிடிக்க கிரியா ஊக்கியாக இருந்தது இந்த ஹலோ என்ற வார்த்தை தான். காரணம் என்ன தெரியுமா? ஹலோ என்பது அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லின் காதலியான ஹலோ தான். உண்மையில் காதலுக்கு முதன் முதலில் மரியாதை செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தான். இவருடை காதலியான மார்கரேட் ஹலோ கொடுத்த ஊக்கம் மற்றும் உற்சாகத்தினால் தான் டெலிபோன் சாதனத்தை கண்டுபிடித்தார். தன்னுடைய தொடர்ச்சியான அயராத உழைப்பினால் 1874ஆம் ஆண்டு டெலிபோனை கண்டுபிடித்தார்.

தன்னுடைய கண்டுபிடிப்பை வர்த்தகப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டினார். தான் கண்டுபிடித்த சாதனத்தை பல்வேறு தரப்பினர் முன்பும் செயல் விளக்கம் செய்து காட்டினார். ஆனால் யாருமே கண்டுகொள்வதாக தெரியவில்லை. இறுதியில், இங்கிலாந்து ராணி விக்டோரியா மஹாராணி முன்பாக டெலிபோனை உபயோகிக்கும் முறையை செய்து காட்டினார். அந்த செயல் விளக்கத்தின் போது, அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் அவர் முதலில் உச்சரித்தது ஹலோ என்ற வார்த்தை தான்.

எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே. இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் “ஹலோ’ சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், “ஹலோ’ தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

நம் அன்பை, அபிமானத்தை, அக்கறையை, அடுத்தவரிடம் சொல்லாத இடங்களில் எல்லாம் இதே நிலைதான் ..இந்தநிலை மாற நான் என்ற அகங்காரம் இல்லாத அன்பின் வார்த்தையான ‘ஹலோ’ வை சொல்வோம் அனைவரிடமும்..

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக ஹலோ தினமான இன்று நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் ஹலோ என்று அன்பாக சொல்லி பேசுவோம். இதன் மூலம் சக மனிதர்களுடனான அன்பையும், நேசத்தையும் உறவையும் பலப்படுத்துவோம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.