தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை பகுதியில் காமராஜர் நகரை சேர்ந்த ஓட்டுநர் கணேசன் (44 வயது) என்பவர் கடந்த 2021 ல் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 13 வயது சிறுவனுடன் தகாத முறையில் ஓரின சேர்க்கை உறவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் அந்த சிறுவனின் தாய் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கணேசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வர போன நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரிடம் சென்ற கணேசன் வழக்கை வாபஸ் பேர்சொல்லி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.
ஆனால், இதற்கு சிறுவனின் தாயார் சமாதானமாக செல்லாமல் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குற்றவாளி கணேசனுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கணேசன் பயத்தில், நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.