
காவ்யா அறிவுமணியின் கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள்
தொலைக்காட்சி நடிகையான காவ்யா அறிவுமணி இந்த ஆண்டில் மட்டும் 'மிரள்', 'ரிப்பப்பரி' என இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஹீரோயின் மெட்டீரியலான காவ்யாவுக்கு சின்னத்திரையில் நடிக்கும் போதே ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது அவரது சினிமா என்ட்ரியும் பாசிட்டிவான கமெண்டுகளை பெறவே இனி காவ்யா சினிமாவில் மட்டுமே நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவ போல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரிலிருந்தும் காவ்யா அண்மையில் வெளியேறி இருந்தார். சினிமா வாய்ப்பிற்காக போட்டோஷூட்டுகளில் அதிக கவனம் செலுத்தி வரும் காவ்யா, அண்மையில் கவர்ந்திழுக்கும் மாடர்ன் டிரெஸ்ஸில் வெளியிட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.