மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழ்நாடு போலீசின் அதிரடி நடவடிக்கை!

கர்நாடக மாநிலம், மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவமத்தின் எதிரொலியாக ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் பயணிகள் வாகனம் மற்றும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுப்பி வைத்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு கங்கநாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் ஆட்டோவில் சென்ற பயணியின் பார்சல் திடீரென வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஆகியோர் காயம் அடைந்தனர். விசாரணையில் ஆட்டோவில் சென்ற பயணி கொண்டு சென்றது குக்கர் வெடிகுண்டு என உறுதியாகி செய்யப்பட்டுள்ளதாகவும், இது சதிதிட்டம் தான் என்றும் கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்

மேலும் இதுகுறித்து கர்நாடக போலீசார் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக பிரேம் ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார் அவருடைய பெயர் உண்மை பெயர் தானா அல்லது போலியான பெயரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர் போலி ஆதார் கார்டுகளை கொண்டு அவர்கள் சிம் கார்டு வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக எல்லையான ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் தமிழக போலீசார் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.

மேலும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் கார்கள், டெம்போ வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் போலீசார் தீவரிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தை ஒட்டி உள்ள கர்நாடகா எல்லை மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநில எல்லைகளிலும் வாகன சோதனைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த மாதம் தீபாவளிக்கு முதல்நாள் காரில் கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்த விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இதனை குண்டுவெடிப்பு என்றே கூறி உள்ளதாகவும், இது தற்கொலைப் படை தாக்குதல் தான் என்றும் தமிழக பாஜக இந்த விஷயத்தில் தமிழகத்தை ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தது.

இந்த நிவையிவ் தற்போது பாஜக ஆட்சிபுரியும் கர்நாடக மாநிலத்தின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.