
5 ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்!
இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் இன்று விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். ரசிகர்களிடம் சில நிமிடங்கள் பேசியுள்ளார். மேலும் வந்திருந்த அனைவருக்கும் சுட சுட பிரியாணியும் வழங்கியுள்ளார் விஜய். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.