ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
தமிழக ஆந்திர எல்லையான எலவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தமிழகம் வந்த ஆந்திர மாநில பேருந்தை சோதனை செய்தனர்.
அப்போது அதில், சந்தேகத்துக்கு இடமாக பயணித்த இருவரை விசாரித்து சோதனை மேற்கொண்டனர். அவர்கள் வைத்திருந்த பையில் 420 போதை மாத்திரைகள் இருந்தது. இதையடுத்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் இருவரும் நெல்லூரைச் சேர்ந்த ரிஸ்வான் (19) இஸ்ராயில் (24) என்பதும், ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும் போதை மாத்திரைகளை வாங்கி தமிழகத்தில் உள்ள பல பகுதிகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்னர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
