மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு ஒப்பந்தம்
37 வயதான போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.
இவர் கடந்த 2021ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
ஆனால் தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Cristiano Ronaldo is to leave Manchester United by mutual agreement, with immediate effect.
The club thanks him for his immense contribution across two spells at Old Trafford.#MUFC
— Manchester United (@ManUtd) November 22, 2022
பயிற்சியாளருடன் முரண்பாடு
மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியில் இருந்து விலகியதற்கு முன்பு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.
அதில் தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.
அத்துடன் அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை, நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும், அவர் அவரது கெரியரை முடித்து விட்ட காரணத்தினாலும் என்னை இவ்வாறு அவர் விமர்சிக்கலாம் என கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ரொனால்டோவின் இந்த பேட்டிக்கு பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம், ரொனால்டோ அணியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவித்தார்.
Cristiano Ronaldo statement 🚨🇵🇹
“Following talks with Manchester United, we’ve mutually agreed to end our contract.
I love Manchester United and I love the fans, that will never ever change.
It feels like the right time to seek a new challenge.
I wish Man Utd all the best”. pic.twitter.com/rQTxEIjrLA
— Fabrizio Romano (@FabrizioRomano) November 22, 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறி இருப்பது குறித்த தகவலை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறுகிறார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கால்பந்து உலக கோப்பை போட்டியில் கோலாகலமாக தொடங்கி உள்ள இந்த வேளையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
“I love Manchester United and I love the fans, that will never ever change” ❤️
Cristiano Ronaldo’s statement. pic.twitter.com/CyXLtekbVd
— Sky Sports Premier League (@SkySportsPL) November 22, 2022