தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனிடையே கடந்த 10ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 2 நாட்கள் கனமழை பெய்தது.
இதில், தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி வந்ததால் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.