பற்றியெரியும் வீட்டுக்குள் ஓடமுயன்ற இளம்பெண்: பின்னர் தெரியவந்த உண்மை


வேல்ஸ் நாட்டில் பற்றியெரிந்து கொண்டிருக்கும் வீடு ஒன்றிற்குள் ஓட முயன்ற இளம்பெண்ணை தடுத்து நிறுத்த அக்கம்பக்கத்தவர்கள் போராடவேண்டியதாயிற்று.

தீப்பற்றியெரிந்துகொண்டிருக்கும் வீட்டுக்குள் ஓட முயன்ற இளம்பெண்

வேல்ஸ் நாட்டிலுள்ள Newport என்ற இடத்திலமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று தீப்பற்றியெரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தவர்கள் பதற்றமடைந்துள்ளார்கள்.

ஒருவர் தீயணைப்புத்துறையினரை அழைக்க, மற்றவர்கள் வந்து அந்த வீட்டிலிருந்த சபீனா (Sabina Khanom, 27) என்ற இளம்பெண்ணை வீட்டுக்குள்ளிருந்து வெளியே இழுத்துக்கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனால், சபீனா தன் குழந்தையின் உடைகள் வீட்டுக்குள்ளிருப்பதாகக் கூறி மீண்டும் வீட்டுக்குள் ஓட, Gary Burroughs என்பவர் அவரை வீட்டுக்குள்ளிருந்து வெளியே இழுத்துக்கொண்டு வந்துள்ளார்.

ஆனாலும் சபீனா மீண்டும் மீண்டும் வீட்டுக்குள் ஓட முயற்சி செய்யவே, சிலர் அவரைப் பிடித்துவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பற்றியெரியும் வீட்டுக்குள் ஓடமுயன்ற இளம்பெண்: பின்னர் தெரியவந்த உண்மை | A Young Woman Who Runs Into A Burning House

Image: CPS/WALES NEWS SERVICE

பின்னர் தெரியவந்த உண்மை

இதற்கிடையில், அந்த பகுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் அந்த வீட்டுக்குள்ளிருந்து புகை வருவதைக் கவனித்து, அங்கே என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்திருக்கிறார்கள்.

அப்போது, சபீனா அந்த வீட்டிலிருந்த சோஃபாவின் மீது காகிதத்துண்டுகளைப் போட்டு லைட்டரின் உதவியால் தீவைப்பதை அவர்கள் கவனித்துள்ளார்கள். உடனடியாக அவர்கள் தங்கள் தாயிடம் இந்த விடயத்டைக் கூற, அவர்தான் தீயணைப்புத்துறையினரை அழைத்திருக்கிறார்.

ஆக, சபீனா வேண்டுமென்றே வீட்டுக்குள் தீவைத்தது தெரியவந்ததையடுத்து, அவர் பல உயிர்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையில் தீவைத்ததால், அவருக்கு இரண்டு ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 

பற்றியெரியும் வீட்டுக்குள் ஓடமுயன்ற இளம்பெண்: பின்னர் தெரியவந்த உண்மை | A Young Woman Who Runs Into A Burning House

Image: CPS/WALES NEWS SERVICE



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.