தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து வரும் நவம்பர் 26 ஆம் தேதி) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சாா்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனர்.
அந்த வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் நவம்பர் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் www.tnprivatejobs.tn.gov.in, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.