சபரிமலையில் ஆறு நாட்களில் 2.62 லட்சம் பக்தர்கள் தரிசனம்| Dinamalar

சபரிமலை :”நடை திறந்த ஆறு நாட்களில், சபரிமலையில் 2.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்,” என கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் சுமுகமான சூழலில், எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இங்கு, கார்த்திகை 1ம் தேதி 47 ஆயிரத்து 947 பேர் தரிசனம் செய்தனர். கடந்த ஆறு நாட்களில், 2.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இனி வரும் நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரிசன நேரத்தை அதிகரித்ததால், பக்தர்களின் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்துள்ளது.

கேரள அரசு போக்குவரத்துக்கழகம், நிலக்கல் – பம்பை இடையே 6,693 பஸ் சர்வீஸ்களை இயக்கிஉள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் 9,142 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். பக்தர்களின் புகார்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.