ஜனநாயக ரீதியிலான தேர்தல் முறைமையை உருவாக்குவதற்கு தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த மாற்றங்கள் தேர்தலை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் காணப்படும் உரிமைகள் தொடர்பில் ஏதேனும் தடைகள் காணப்படின் அவற்றை நிவர்த்தி செய்வதாகவும் பிரதமார் சுட்டிக்காட்டினார்.
உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பான வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்திருத்திற்காக அமைச்சரவை அனுமதித்துள்ளமை தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைகளில் 25வீதமான இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்பளிப்பதற்கான சட்டமூலம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலானது வரவேற்கத்தக்கது என எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய பாராளுமன்ற உரையை ஆரம்பித்து வைக்கும் போது தெரிவித்தார்.
ஆனால் தேர்தல் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு இப்படியொரு தீர்மானமெடுத்தமை சர்ச்சைக்குரியதாகவும் அவர் சுட்டிக்காட்டினர். இதற்கான காரணத்தை விளக்குமாறு பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரை நோக்கி கோரினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்....
சபை உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பதில் நாம் அனைவரும் உறுதியாக உள்ளோம். அது குறித்து சந்தேகம் வேண்டாம். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உரிமைகள் ,அதிகாரங்கள் தொடர்பில் எவ்வித தடையும் ஏற்படுத்தவிவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்களை ஆராய்ந்து, உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையை மாற்றுதல், உறுப்பினர் ஆசனங்களைக் குறைத்தல், செலவினங்களைக் குறைத்தல் போன்ற அரசாங்கத்தின் தீர்மானங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையின் ஊடாக உருவாக்கப்பட்டது. நாம் அதன்படி செயற்படுகிறோம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்போது அதற்கு அனைவரும் ஆதரவளித்தனர். அதை யாரும் புறக்கணிக்கவில்லை. நேற்றைய தினம் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 121 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. எதிர்கட்சியினர் எதிர்பாராதவிதமாக வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். மீண்டும் ஒருமுறை முன்னும் பின்னுமாக செல்லும் இந்த செயற்பாட்டை நிறுத்திவிட்டு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின்படி செயற்படுவோம் எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.