திருச்சி அருகே துறையூர் ஆலமரம் சந்திப்பு பகுதியில் பாஸ்கர் மற்றும் பிரபு என்ற இருவரும் நகைக்கடைகள் வைத்திருக்கின்றனர். அதிகாலை நேரத்தில் இந்த நகை கடைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் உரிமையாளர்களான பிரபு மற்றும் பாஸ்கரிடம் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து வந்த இருவரும் தங்களது கடைகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரண்டு கடைகளிலும் சேர்த்து மொத்தமாக 12 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி உள்ளிட்டவை காணாமல் போய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து அருகில் இருக்கும் சில கடைகள், கோவில் உண்டியல்கள் உள்ளிட்டவற்றில் அந்த மர்ம நபர்கள் கை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்த கடைகள் மற்றும் கோயில்களில் தொடர்ந்து திருடி கொண்டு சென்ற நபர்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.