பிரித்தானிய அரசின் அனுமதியின்றி ஸ்காட்லாந்து அரசு சுதந்திர வாக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுதந்திர வாக்கெடுப்பு
பிரித்தானியாவின் அங்கமாக இருக்கும் ஸ்காட்லாந்தில் தனி சுதந்திர கோரிக்கையை முன்வைத்து, நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை மாலை ஸ்காட்லாந்து முழுவதும் உள்ள நகரங்களில் தொடர்ச்சியான சுதந்திர ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டன.
📺 Crowds cheer as Nicola Sturgeon addresses Scottish independence supporters outside the Parliament following the Supreme Court verdict today pic.twitter.com/YK47nVWiXA
— The National (@ScotNational) November 23, 2022
அத்துடன் ஸ்காட்லாந்து பாராளுமன்றத்திற்கு வெளியே புதன்கிழமை மாலை சுதந்திர ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் பேசிய முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன், இந்த சுதந்திர இயக்கம் தற்போது “ஸ்காட்லாந்தின் ஜனநாயக இயக்கமாக” மாறும் என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அடுத்த ஆண்டு அக்டோபர் 19 அன்று ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் சுதந்திர வாக்கெடுப்பு நடத்த விரும்புவதாக தெரிவித்து இருந்தார்.
ஆனால் ஸ்காட்லாந்தின் இந்த பொது வாக்கெடுப்பிற்கு முறையான ஒப்புதல் வழங்க பிரித்தானிய அரசு மறுத்துவிட்டது.
independence supporters Rallies(PA)
நீதிமன்றத்தில் அதிரடி முடிவு
இந்நிலையில், பிரித்தானிய அரசின் முறையான அனுமதியின்றி ஸ்காட்லாந்து அரசு பொது சுதந்திர வாக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த பிரச்சனை வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால், அதற்கான அதிகாரம் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜனுக்கு இல்லை என்று நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.
WATCH: UK’s senior judges rule Scottish Parliament does not have the power to legislate for an independence referendum
Follow reaction LIVE: https://t.co/IomNUSkDys pic.twitter.com/WgpFgfK06n
— BBC Scotland News (@BBCScotlandNews) November 23, 2022
நீதிமன்ற தலைவர் லார்ட் ரீட் தெரிவித்த அறிவிப்பில், 1999ம் ஆண்டு ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தை உருவாக்கிய சட்டங்கள் ஸ்காட்லாந்துக்கும், பிரித்தானியாவிக்கும் இடையிலான ஒன்றியம் உட்பட அரசியலமைப்பு பகுதிகளுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த பிரச்சினைகள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொறுப்பாகும், மேலும் இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் உடன்பாடு இல்லாததால் ஸ்காட்லாந்து பாராளுமன்றம் பொதுவாக்கெடுப்பு நடத்த சட்டமியற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
2/ Scottish democracy will not be denied.
Today’s ruling blocks one route to Scotland’s voice being heard on independence – but in a democracy our voice cannot and will not be silenced.
I’ll make a full statement later this morning – tune in around 11.30am— Nicola Sturgeon (@NicolaSturgeon) November 23, 2022
2014 இல் நடத்தப்பட்ட சுதந்திர வாக்கெடுப்பில், 55% முதல் 45% வரையிலான வாக்காளர்கள் பிரித்தானியாவில் எஞ்சியிருப்பதை ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற முடிவு குறித்து முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன், தான் ஏமாற்றமடைந்தாகவும், ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிபதிகள் சட்டத்தை உருவாக்கவில்லை, அதனால் அதற்கு நீதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
independence supporters (Twitter)