இனி தேங்காய் மட்டையை தூக்கி வீசாதீங்க! இதில் பல நன்மைகள் ஒளிந்துள்ளதாம்.. கட்டாயம் தெரிஞ்சிகோங்க


தென்னை மரத்தை கற்பக விருட்சம் என்று கூறுவர். ஏனெனில் தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை.

அதிலும் தேங்காய் மட்டையின் பண்புகள் சிலருக்கு மட்டுமே தெரியிருக்கும்.

தேங்காயை சாப்பிட்ட பிறகு, மக்கள் அதன் மட்டையை தூக்கி எறிந்துவிடுவதை நாம் அடிக்கடி காணலாம். உண்மையில் இது பல நன்மைகளை தருகின்றது.

இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

எனவே தேங்காய் மட்டையை எப்படி பயன்படுத்தினால் நன்மையை பெறலாம் என்பதை பார்ப்போம்.  

இனி தேங்காய் மட்டையை தூக்கி வீசாதீங்க! இதில் பல நன்மைகள் ஒளிந்துள்ளதாம்.. கட்டாயம் தெரிஞ்சிகோங்க | Coconut Husk Have These Amazing Benefits

  • தேங்காய் மட்டையால் காயத்தின் வீக்கத்தையும் நீக்கலாம். தேங்காய் மட்டையை அரைத்து மஞ்சளுடன் கலந்து எரியும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம் குறையும். 
  • தேங்காய் மட்டையைப் பயன்படுத்தி பற்களின் மஞ்சள் நிறத்தையும் நீக்கலாம். இதற்கு தேங்காய் முடியை எரித்து பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சோடா கலந்து பல்லில் லேசாக மசாஜ் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.  
  • தேங்காய் மட்டையை கடாயில் சூடாக்கி அரைக்கவும். இந்த பொடியை தேங்காய் எண்ணெயில் கலக்கவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசவும், இதனால் முடி கருமையாக மாறும். 
  • தேங்காய் மட்டையை அரைக்கவும். இந்த பொடியை தினமும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பிரச்சனை குணமாகும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.