சாப்பாடு தட்டில் இருந்து வயிற்றுக்குள் செல்லாமல் ஓரங்கட்டப்பட்டு குப்பைத் தொட்டிக்குள் செல்லும் பொருளாக கறிவேப்பிலை உள்ளது!
வயது வித்தியாசம் இன்றி பலரும் கருவேப்பிலையை சாப்பிடாமல் தவிர்க்கிறோம்.
கறிவேப்பிலைக்கு கறிவேம்பு, கறியபிலை போன்ற பெயர்களும் உள்ளன.
வெறும் வாசனைக்காக மட்டும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதில்லை! அதிலிருக்கும் மருத்துவக் குணங்கள் அதன் அதற்கு முக்கிய காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா?
ரத்தக்குறைவு நோயைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது. நிறைய பழங்களோடு சேர்த்து, கறிவேப்பிலை பொடியையும் சேர்த்துக் கொண்டால் குறைந்திருக்கும் ரத்த உற்பத்தி விரைவாக அதிகரிக்கும்.
dhanyam
கறிவேப்பிலையை அடிக்கடி பயன்படுத்தினால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராது.
தலைமுடி
தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்த உணவுப் பொருள் கறிவேப்பிலை. முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பள்ளிப் பருவத்திலேயே உண்டாகும் இளநரைக்கும் கறிவேப்பிலை சிறந்தது.
உணவு வகைகளில் சேர்க்கப்படும் கறிவேப்பிலைகளை, உணவோடு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அதன் சாரம் செரிமானத் தொந்தரவுகளை சரிசெய்து செரிமான பாதையை மேம்படுத்தும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கை,கால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
healthline