கமல்ஹாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி: என்ன காரணம்?

கட்சித் தலைவரும், நடிகருமான

, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல், சினிமா, பிக் பாஸ் நிகழ்ச்சி என தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வருகிறார் கமல்ஹாசன்.

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இது ஒரு புறமிருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

திரைப்பட பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹைதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். மீண்டும் நேற்று மதியம் சென்னைக்கு திரும்பிய நிலையில், உடல்சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கமல்ஹாசன், இன்று மாலை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்றும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொன்னதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவரது தரப்பினர் கூறுகின்றனர். கமலுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது மருத்துமனையின் அறிக்கைக்கு பிறகே தெரியவரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.